அரச ஊழியர்கள் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்களை அழைப்பதை கட்டுப்படுத்தி புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, எவ்வித இடையூறும் இன்றி தமது கடமைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான குறைந்தபட்ச ஊழியர்களை மாத்திரம் அழைக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகத்தின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னேவினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.