மேலும் ஒரு வார காலத்திற்கு விடுமுறை!

மேலும் ஒரு வார காலத்திற்கு விடுமுறை!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி நாளை திங்கட்கிழமை (11) முதல் வௌ்ளிக்கிழமை (15) வரை அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேலும் 2022 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நாட்காட்டியின் அடிப்படையில் 18.07.2022 முதல் பாடசாலைகளை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.