சவேந்திர சில்வா விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

சவேந்திர சில்வா விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு மக்களின் ஆதரவு மிகவும் அவசியமானது எனவும் அதற்காக அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பு தரப்பினருக்கு ஆதரவளிக்குமாறும் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் நிலவும் நெருக்கடியை அமைதியான முறையிலும், அரசியலமைப்பு முறையிலும் தீர்க்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இத்தருணத்தில் நாட்டின் அமைதியைப் பாதுகாக்க படையினருக்கும் பொலிஸாருக்கும் தேவையான ஆதரவை வழங்குமாறு அவர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.