அமைச்சர் மஹிந்த அமரவீர இராஜினாமா!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கமத்தொழில், வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சரான மஹிந்த அமரவீர தனது அமைச்சு பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்திய கடனுதவியின் கீழ் நாட்டிற்கு கொண்டுவரப்படும் உரத்தை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றதன் பின்னர் அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.