அமைச்சர் தம்மிக்க பெரேரா இராஜினாமா!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா சற்றுமுன்னர் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் ஜூன் 24 ஆம் திகதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
இதேவேளை, தம்மிக்க பெரேரா ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.