மீண்டும் சமையல் எரிவாயு விநியோகம்!

மீண்டும் சமையல் எரிவாயு விநியோகம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 3,700 மெற்றி தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று பிற்பகல் இலங்கையை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல் இலங்கையை வந்தடைந்தவுடன் சமையல் எரிவாயு விநியோகம் நாட்டினுள் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாளை (11) 3,740 மெற்றி தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக 3,200 மெற்றி தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் 15 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.