தீர்வு கிடைக்கும்? – சர்வதேச நாணய நிதியம்!

தீர்வு கிடைக்கும்? – சர்வதேச நாணய நிதியம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் தற்போதைய நிலை குறித்து மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்க அனுமதிக்கும் தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண முடியும் என நம்புவதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியில் உள்ள தமது பிரதிநிதிகளுடன் தொழில்நுட்ப கலந்துரையாடல்களை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக சர்வதேச நாயண நிதியம் மேலும் தெரிவித்துள்ளது