புகையிரத பயணிகளுக்கான அறிவிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று (11) முதல் புகையிரதங்கள் வழமை போன்று இயங்கும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை முதல் நேர அட்டவணையின்படி புகையிரதங்களை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, அலுவலக புகையிரதங்களும் வழமை போன்று இயங்கும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.