எரிபொருள் கப்பல்கள் தொடர்பான அமைச்சரின் அறிவிப்பு

எரிபொருள் கப்பல்கள் தொடர்பான அமைச்சரின் அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 15-17 ஆம் திகதிகளுக்கு உட்படப்ட காலப்பகுதியில் வரவுள்ள டீசல் தொகைக்கான முழுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் 22-24 ஆம் திகதிகளுக்கு உட்படப்ட காலப்பகுதியில் வரவுள்ள பெட்ரோல் தொகைக்கான முழுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 15-17 ஆம் திகதிகளுக்கு உட்படப்ட காலப்பகுதியில் வரவுள்ள டீசல் கப்பல் மற்றும் 17-19 ஆம் திகதிகளுக்கு உட்படப்ட காலப்பகுதியில் வரவுள்ள பெட்ரோல் கப்பலுக்கான முற்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.