கோட்டாபய ராஜபக்ஷ அருகில் உள்ள நாடொன்றுக்கு சென்றுள்ளார்: சபாநாயகர்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு சென்றுள்ளார் என்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.
அவர் அருகில் உள்ள நாடொன்றுக்கு சென்றுள்ளதாக சபாநாயகர் பி. பி.சிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
என்றாலும் அவர் எதிர்வரும் புதன்கிழமை நாட்டுக்கு திரும்பி வருவார் என்றும் அவர் தெரிவித்தார்.