எறிகணைகள் தாக்கி மக்கள் கொல்லப்பட்டமைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள உக்ரைன் ஜனாதிபதி

எறிகணைகள் தாக்கி மக்கள் கொல்லப்பட்டமைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள உக்ரைன் ஜனாதிபதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

உக்ரைனில் ரஷ்ய எறிகணைகள் தாக்கப்பட்டதில் மக்கள் பலர் கொள்ளப்பட்டுள்ளனர்.

கிழக்கு உக்ரைனில் உள்ள சாசிவ் யாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை தாக்கியதிலே இவ்வாறு 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

குழந்தை ஒன்று உட்பட 20 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளதாக அதிகாரிகள் கூறுயுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என உக்ரேனிய அவசர சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலின்போது ஐந்து மாடி கட்டிடத்தின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது.

ரஷ்ய உராகன் எறிகனைகள் காரணமாகவே இந்த அழிவு ஏற்பட்டுள்ளதாக பிரதேசத்தின் ஆளுநர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்துள்ளார்.
இந்த குடியிருப்பு தொகுதி மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும், “ஒவ்வொரு ரஷ்ய கொலைகாரனுக்கும் தண்டனை தவிர்க்க முடியாதது” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.