பார்ட்டியில் வெடித்த துப்பாக்கி!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உரகஸ்மன்ஹந்திய, கோரகீன பிரதேசத்தில் துப்பாக்கியொன்று இயங்கியதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (12) இரவு இடம்பெற்றுள்ளது.
கோரகீன பிரதேசத்தில் மூன்று பேர் இணைந்து விருந்து ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
அந்த இடத்திற்கு வந்து நபர் ஒருவரால் கொண்டுவரப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை பரிசோதித்த போது துப்பாக்கி இயங்கியதில் ஒருவர் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவித்தனர்.
கோரகீன, உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
சம்பவ தொடர்பில் துப்பாக்கி மற்றும் துப்பாக்கியை கொண்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.