ஜனாதிபதியாக தெரிவானால், பதவியை ஏற்க தயார்- சரத் பொன்சேகா!

ஜனாதிபதியாக தெரிவானால், பதவியை ஏற்க தயார்- சரத் பொன்சேகா!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தம்மை ஜனாதிபதியாக தெரிவு செய்தால் ஜனாதிபதி பதவியை ஏற்க தயார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு குழு உட்பட சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுமாறு தம்மிடம் கோரப்பட்டுள்ளது.

எனவே தாம் தெரிவு செய்யப்பட்டால் பதவியை ஏற்றுக்கொள்ளப்போவதாக முன்னாள் இராணுவத் தளபதி இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தெரிவித்தீர்களா என்று கேட்டதற்கு பீல்ட் மார்ஷல் பொன்சேகா தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

தமது தனிப்பட்ட விவாதங்கள் குறித்து தலைவரிடம் சொல்ல வேண்டியதில்லை என்று சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இதேவேளை தம்வசம் உள்ள அரச கட்டிடங்களை ஒப்படைக்க அவசரப்பட வேண்டாம் என்றும் போராட்டக் குழுக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.