13 நிமிடங்களில் கூடிக் கலைந்த பாராளுமன்றம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றத்தின் இன்றைய விசேட அமர்வு காலை 10 மணிக்கு ஆரம்பமாகி 13 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய அமர்வில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ராஜினாமா செய்தது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு பாராளுமன்ற செயலாளர்கள் நாயகத்தினால் வாசிக்கப்பட்டது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேயவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அமர்வில், பாராளுமன்ற செயலாளர்கள் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஜனாதிபதியின் ராஜினாமா தொடர்பான கடிதத்தை வாசித்ததோடு, அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் எடுத்துக் கூறினார்.
இதன்படி, எதிர்வரும் 19ஆம் தேதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று பாராளுமன்றத்தில் செயலாளர் நாயகம் அறிவித்தார்.
இந்த அறிவிப்புகளை தொடர்ந்து பாராளுமன்றம் எதிர்வரும் 19ஆம் தேதி காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது