ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பொது மன்னிப்பு?

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பொது மன்னிப்பு?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கு தேவையான விடயங்களை பரிசீலிக்க அனைத்து ஆவணங்களையும் வழங்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறைச்சாலை ஆணையாளரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, அதற்கான ஆவணங்களை நாளை (18) பெற்றுக் கொள்வதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.