தொடரும் பஸ் வேலை நிறுத்தப் போராட்டம்

தொடரும் பஸ் வேலை நிறுத்தப் போராட்டம்

அளுத்கம தனியார் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை தனியார் பஸ் சங்க செயலாளர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ் ஊழியர்கள் சிலருக்கு இலங்கை போக்குவரத்து பஸ் ஊழியர்கள் தாக்கியமை குறித்தே இக்குறித்த வேலை நிறுத்தம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அளுத்கம – கொழும்பு, அளுத்கம – மதுகம, அளுத்கம – களுத்துறை உட்பட அளுத்கம தனியார் பஸ் முழுவதும் வேலை நிறுத்தத்தை தொடங்கியதை அடுத்து தென்பகுதி தனியார் பஸ்களும் தங்கள் ஒத்துழைப்பை வழங்கி குறித்த வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.