நாகப்புற்றிலிருந்து நகலெடுக்கிறார் கோத்தபாய

நாகப்புற்றிலிருந்து நகலெடுக்கிறார் கோத்தபாய

கடந்த அரசாங்கத்தின் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் ராஜபக்ஷர்கள் மீண்டும் ஒழுங்கமைக்கப்பதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ராஜபக்ஷ தரப்பினரால் “கூட்டு எதிர்க்கட்சி” என்ற பெயரில் அமைப்பொன்றை அமைப்பதற்கு தீர்மானித்திருப்பதும் குறித்த இலக்கினை அடைவதற்கென தெரிவிக்கப்படுகின்றது.

“கூட்டு எதிர்க்கட்சி” தொடர்பில் எதிர்வரும் 18ம் திகதி கொழும்பில் அறிவிக்கவுள்ள நிலையில் அதன் தீர்க்கமான தலைவராக தினேஷ் குணவர்தனவும், அமைப்பாளராக டலஸ் அலகபெருமவும், ஏற்பாட்டாளராக பிரசன்ன ரணதுங்கவும் செயற்படவுள்ளனர்.

இந்த அமைப்பின் உள் தலைவராக கடந்த அரசாங்கத்தின் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோத்தபாய ராஜபக்ஷ செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த செயற்பாட்டிற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்கத்துடன் கடுமையான மோதலை ஏற்படுத்தி மக்கள் கருத்துக்களை கட்டியெழுப்புவதற்கு “கூட்டு எதிர்க்கட்சி” அமைப்பு இதுவரையிலும் தீர்மானித்துள்ளது.

மேலும் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் மற்றும் ஜெனீவா பிரேரணை செயற்படுத்துவது குறித்து விமர்சிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய எதிர்வரும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ராஜபக்ஷ தரப்பினரை ஈடுபடுத்தி நாடாளுமன்றத்தினுள் மற்றும் வெளியில் பல செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.