அனுஷ மற்றும் லலித் இனது வழக்கு விசாரணைகள் பிற்போடு

அனுஷ மற்றும் லலித் இனது வழக்கு விசாரணைகள் பிற்போடு

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணையை பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா விஜேவர்தன தினத்தை அறிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாடளாவிய ரீதியில் உள்ள விகாரைகளில் பக்தர்களுக்கு சில் துணி வழங்குவதற்கு தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் ரூபா பணத்தை பயன்படுத்தியதாக குற்றம்சுமத்தி சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை இலங்கை இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்ற தருஸ்மான் அறிக்கை சட்டவிரோதமானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை டிசம்பர் மாதம் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.