பாகிஸ்தான் – இந்திய கிரிகெட் கனவு நிபந்தனைக்கு மத்தியில் ஒப்பந்தம்

பாகிஸ்தான் – இந்திய கிரிகெட் கனவு நிபந்தனைக்கு மத்தியில் ஒப்பந்தம்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கு இந்தியா ஒப்புதல் வழங்கி உள்ளது.

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் காரணமாக டிசம்பர் மாதம் நடக்கவிருந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இது தொடர்பான பேச்சு வார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருந்த நிலையில், பாகிஸ்தான் அணியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் விளையாட இந்தியா ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டாந்திர கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் ஷஷாங் மனோகர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “பாகிஸ்தான் அணியுடனான 2 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஆனால் ஒரு நிபந்தனை. இந்தப் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் அல்லது பாகிஸ்தானில் எங்களால் விளையாட முடியாது. அதனால் வடக்கு இந்தியாவில் நடத்த வேண்டும்.

இருப்பினும் இது தொடர்பாக நாங்கள் மத்திய அரசுடன் பேச வேண்டும். உரிய அனுமதி கிடைத்த பிறகே கிரிக்கெட் தொடர் பற்றி பேச முடியும்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த தொடருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், “பாகிஸ்தானுடனான உறவு என்பது அவசியமான ஒன்று என்று நாம் நினைக்கிறோம். அதையே அவர்களும் நினைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.