100,000 கிலோ கிராம் பால் மா நாசமாகப் போகிறதா…?

100,000 கிலோ கிராம் பால் மா நாசமாகப் போகிறதா…?

கடந்த ஜூலை மாதம் 4 கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட 100,000 கிலோ கிராம் பால் மாவை கால்நடை தீவனமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுங்க அதிகாரிகள் குழு ஒன்றினால் கொள்கலன்களை விடுவிப்பதற்காக தரகு பணம் கோரப்பட்டுள்ள காரணத்தால் குறித்த அதிகாரிகள் கொள்கலன்களை விடுவிக்காமல் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்த குற்றச்சாட்டை சுங்க ஊடகப் பேச்சாளர் சுதத்த சில்வா நிராகரித்த 

மேலும் பால் மா கொள்கலன்களை விடுவிப்பதில் சிக்கல் இருப்பின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தினூடாக தீர்வு காண வேண்டும் என்றார்.