வெளியேறினார் நெய்மர் – அதிர்ச்சியில் கால்பந்து ரசிகர்கள்..!
2022 கால்பந்து உலக கோப்பை தொடரில் இருந்து பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான ஜே.ஆர்.நெய்மர் வெளியேறியுள்ளார்.
செர்பியாவுக்கு எதிரான கடந்த வெள்ளிக்கிழமை(25) இடம்பெற்ற தொடக்க ஆட்டத்தில் கனுக்காலில் ஏற்பட்ட காயத்தையடுத்து எஞ்சிய முதல்சுற்று லீக் போட்டிகளில் நெய்மர் பங்கேற்க மாட்டார் என பிரேசில் அணி அறிவித்துள்ளது.
காயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனைகள் மூலம் இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டள்ளது.
2022 கால்பந்து உலக கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் என கணிக்கப்பட்ட அணிகளில் பிரேசில் அணியும் ஒன்றாகும்.
தற்போது நெய்மரின் வெளியேற்றமானது அணிக்கும் ரசிகர்களுக்கம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.