மன்னர் சார்லஸ் மீது மீண்டும் முட்டை வீச்சுத் தாக்குதல் – பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!

மன்னர் சார்லஸ் மீது மீண்டும் முட்டை வீச்சுத் தாக்குதல் – பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத் மரணத்திற்கு பிறகு மன்னரான 3ஆம் சார்லஸ் மீது மீண்டும் முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி மரணமடைந்தார். அவருக்கு பிறகு அந்த நாட்டின் மன்னராக அவருடைய மகன் 3ஆம் சார்லஸ் முடி சூட்டிக் கொண்டார்.

அவர் பதவியேற்று ராணிக்கான இறுதி சடங்குகளை முடித்துக் கொண்டு பொதுமக்களை சந்தித்து வருகிறார். அவருடன் மனைவி கமிலா சார்லஸும் செல்கிறார். அங்கு பொதுமக்களுடன் இவர்கள் இருவரும் உரையாடி மகிழ்கிறார்கள்.

மேலும் இவர்களின் பயணம் முழுவதும் வாழ்த்துகளையும் பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் இருவரும் யோர்க் நகருக்கு சென்றிருந்தனர். அங்கு மக்களுடன் சார்லஸ் உரையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு சார்லஸ் மீது ஏதோ ஒரு பொருள் விழுந்தது.

சுதாரிப்பதற்குள் அடுத்தடுக்க பொருட்கள் வீசப்பட்டு அவை உடைந்து சிதறின. அப்போதுதான் மன்னர் சார்லஸ் மீது முட்டைகள் வீசப்பட்டது தெரியவந்தது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து மன்னர் சார்லஸும் ராணி கமீலாவும் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர். இது தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

 இளைஞன் கைது

அந்த இளைஞர் அடிமைகளின் ரத்தத்தால் கட்டப்பட்ட தேசம்தான் இங்கிலாந்து, நீங்கள் மன்னரே அல்ல என கோசம் எழுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் மன்னரை காப்பாற்றுங்கள் கடவுளே என மன்றாடியுள்ளனர். மன்னர் மீது முட்டைகள் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளாக இங்கிலாந்து ராணியாக இருந்தவர் ராணி இரண்டாம் எலிசபெத். இவர் உலகில் அதிக ஆண்டுகள் ராணியாக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவரது மரணத்திற்கு பின்னர் சார்லஸ் மன்னராகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.