கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க பசில் களத்தில்..!

கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க பசில் களத்தில்..!

பசில் ராஜபக்ஷ இன்று (24) காலை தனது கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஆசிர்வாதம் பெறுவதற்காக கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வந்து தலதாவை வழிபட்டார்.

அங்கு கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ஷ;

“இன்று தான் முதலில் ஸ்ரீ தந்த தாதுவை வணங்கி ஆசிர்வாதம் பெற்று பயணத்தினை ஆரம்பித்தேன்..”

கேள்வி – பயணம் யானையுடன் சேர்ந்தா?

“எல்லா இடங்களிலும் இல்லை. பெரும்பாலான இடங்களில் தனித்தனியாகக் போட்டியிடுகிறோம். 252 உள்ளூராட்சிகளில் நேரடியாக பொஹட்டுவ அடையாளத்துடன் போட்டியிடுகிறோம். இன்னும் சில வேறு சில சின்னங்களில் உள்ளன. யாழ்ப்பாணத்தில் வீணையுடன் போட்டியிடுகிறது, மட்டக்களப்பு படகு, குதிரை ஆகியவற்றுடனும் மொத்தம் 340 மன்றங்கள் உள்ளமவே..”

கேள்வி – பொஹட்டுவ மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு சின்னம். ஆனால் அவர்கள் மக்கள் மத்தியில் செல்ல முடியாத காரணத்தினால் தான் இவ்வாறு செய்கிறீர்களா?

“கடந்த முறை அதிகம் போட்டியிடவில்லை. 2018 இல்”

கேள்வி – தேர்தலை ஒத்திவைக்க பல்வேறு யுக்திகள் கையாளப்படுவதாக கூறப்படுகிறது?

‘‘அரசாங்கத்திடம் கேளுங்கள்… நான் ஆட்சியில் இல்லை… வேட்புமனு தாக்கல் ஒத்திவைக்கப்படும் என பலர் காத்திருந்தனர்..”

கேள்வி – பலர் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர். இது ஒரு சவாலா?

“அப்படித்தான். இருந்துவிட்டுப் போகிறார்கள். வெளியேறுகிறார்கள். நுழைகிறார்கள். அரசியல் அப்படித்தான். சவால்தான். ஆனால் அதை நாம் எதிர்கொள்ள வேண்டும்.”

கேள்வி – தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?

“மக்கள் அதை தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள்…”