முட்டை இறக்குதியில் என்னதான் பிரச்சினை? – இந்தியா சென்ற தலைவர்!

முட்டை இறக்குதியில் என்னதான் பிரச்சினை? – இந்தியா சென்ற தலைவர்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விசாரிப்பதற்காக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் இந்தியா சென்றுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அவர் இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முட்டைகள் தொடர்பான அறிக்கை மற்றும் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஆராய்வது இந்த விஜயத்தின் நோக்கமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நாட்டில் முட்டையின் விலையை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அதன் முதல் தொகுதியாக 02 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட முட்டைகளுக்கு இந்திய விலங்குகள் மற்றும் சுகாதாரத் துறை வழங்கிய தரநிலை அறிக்கை இன்னும் வரவில்லை என்று அரசாங்க வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து முட்டைகளை விரைவில் இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அரசாங்க வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர இந்தியா சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது