மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் பணி நீக்கம்

மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் பணி நீக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் நோயல் ஸ்டீபன் அந்தப் பதவியிலிருந்தும் உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டு நோயல் ஸ்டீபனை பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார்.

1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் 185(1) வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பில் நோயல் ஸ்டீபன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் ஆளுநரால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.