ஏப்ரல் 25 தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை

ஏப்ரல் 25 தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இம்மாதம் 25ஆம் திகதி நடத்துவது சாத்தியமில்லை என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் தொடர்பில் பிரதமருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.