“இரவில் ஜனாதிபதியை இரகசியமாக அழைக்கும் சஜித்”
காலையில் ஜனாதிபதிக்கு எதிராக சண்டைப் பேச்சுக்களை நடத்தும் சஜித், இரவில் ஜனாதிபதியை இரகசியமாக அழைத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பாதுகாக்குமாறு கூறி அழுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த வருடமும் இரண்டு முறை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டு யாலக்குச் சென்று யானைகளைப் பார்த்து ஓய்வெடுப்பதே சஜித் பிரேமதாசவின் இப்போதைய நம்பிக்கை என்றும் ரங்கே பண்டார மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி பற்றி அறிந்த அனைவரும் சஜித்துடன் இருந்தாலும் அவர்களின் இதயத்தில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவே இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.