250 மில்லியன் டொலர்களை இலஞ்சம் பெற்று லண்டன் வங்கியில் வைப்பு – உடனடி விசாரணைக்கு உத்தரவு
எக்ஸ்-பிரஸ் பேர்ள் விபத்து நட்டஈடு தொடர்பாக தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலந்துரையாடல்களில் பங்குகொண்ட குறித்த தரப்பொன்று 250 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைப் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த பணமானது, பிரித்தானிய வங்கியொன்றிலுள்ள கணக்கொன்றுக்கு அனுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவை தான் கோரியுள்ளதாக நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.