கண்டியில் உள்ள 203 முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு விசேட பாதுகாப்பு

கண்டியில் உள்ள 203 முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு விசேட பாதுகாப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   கண்டி பிரதேசத்தில் உள்ள 203 முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கண்டி, அக்குரண ஆறாம் தூண் சந்திக்கு அருகே உள்ள பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாயல் ஒன்றினை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக நிச்சயமற்ற தகவல் கிடைத்ததையடுத்து இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்புக்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பள்ளிவாயல்கள் தொடர்பில் விசேட சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.