பரபரப்பான சூழலில் பாராளுமன்றம்

பரபரப்பான சூழலில் பாராளுமன்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றம் இன்று காலை 9.30 க்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தலைமையில் கூடியுள்ளது .

இன்றைய தினம் மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் மூலம் தொடர்பான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், இன்று சபையில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இன்று அது சமர்ப்பிக்கப்பட மாட்டாது என தெரிய வருகின்றது.

சர்வதேச ரீதியிலும், உள்நாட்டிலும் பலமான எதிர்ப்பு,கிளம்பி இருப்பதனால், இதனை சில திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கலாம் என்று அரசாங்க தரப்பு நம்புவதாக தெரிகிறது.
எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பாராளுமன்றத்தில் இந்த சட்ட மூலத்தை சமர்ப்பித்து, எதிர்க்கட்சிகளின் திருத்தங்களை ஏற்று செயல்படுவதற்கும் அரசாங்க தரப்பு ஆலோசித்து வருகிறது.
என்றாலும், எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து இதனை எதிர்ப்பதற்கு தீர்மானித்திருக்கின்றன.

இந்த நிலையில் பாராளுமன்ற அமர்வு மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.