ஐபிஎல் போட்டியில் அடுத்தசுற்றுக்கு செல்லும் அணிகள் – புள்ளிப் பட்டியலில் மாற்றம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின் புள்ளிப்பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.
அந்த அணி 12 போட்டிகளில் பங்கேற்று 8ல் வெற்றி பெற்று 16 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளை பெற்றுள்ளது.
லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் 13 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
புள்ளிப்பட்டியலில் ஏனைய அணிகள் அடுத்தடுத்த நிலையில் உள்ளனர்.
ஐந்தாவது இடம் – ராஜஸ்தான் ரோயல்ஸ்
ஆறாவது இடம் -பஞ்சாப் கிங்ஸ்
ஏழாவது இடம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
எட்டாவது இடம் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஒன்பதாவது இடம் – சன்ரைஸ் ஹைதராபாத்
பத்தாவது இடம் – டெல்லி கேபிடல்ஸ்
இதேவேளை, இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று (14) நடைபெறவுள்ளன.
ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது.