தனுஷ்க குணதிலக மீதான மூன்று பாலியல் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன

தனுஷ்க குணதிலக மீதான மூன்று பாலியல் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பெண் ஒருவரை தனது வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் மூன்று குற்றசாட்டுகள் இன்று கைவிடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடருக்காக இலங்கை அணியுடன் தனுஷ்க அவுஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்திருந்த நிலையில் முதல் போட்டியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், டிண்டர் என்ற சமூகவலைத்தளம் ஊடாக அறிமுகமான பெண்ணொருவரை சந்தித்து, சிட்னியின் கிழக்குப் புறநகரில் உள்ள அவரது வீட்டிற்குத் சென்ற கிரிக்கெட் வீரர் தனுஷ்க, தனது அனுமதி இல்லாமல் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என குறித்த பெண் தனுஷ்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்.

அதற்கமைய, கடந்த 2022 ஒக்டோபர் 6 ஆம் திகதி அதிகாலை சிட்னியின் ஹையாட் ரீஜென்சி விடுதியில் தனுஷ்க கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது