கஜேந்திரகுமார் எம்.பிக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பு!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகும் வரை அவருக்கு இத்தடையை விதிக்குமாறு பொலிஸார் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இதனை பரிசீலித்த கிளிநொச்சி நீதவான், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத் தடையை விதித்து உத்தரவிட்டுள்ளார்.