300 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களுடன் சிக்கியது, டுபாயிலிருந்து வந்த கொள்கலன்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
டுபாய் நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள பொருட்களுடன் கொள்கலன் ஒன்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த கொள்கலனில் இருந்து 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
200 மில்லியன் ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள், மதுபானம், சிகரெட்டுகள் மற்றும் 3 வாகன பாகங்கள் உள்ளிட்டவை வாகன உதிரி பாகங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது.