இலங்கை அணி தொடரை கைப்பற்றியது..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிாிக்கெட் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீா்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 22.2 ஓவா்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சாா்பில் மொஹமட் நபி அதிகபட்சமாக 23 ஓட்டங்களை பெற்றுக்கொண்டாா்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் துக்ஷ்மந்த சமீர 4 விக்கெட்டுக்களையும், வனிது ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினா்.
இதனையடுத்து 117 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16 ஓவா்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சாா்பில் திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களையும், பெத்தும் நிஷங்க 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனா்.
போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடாின் ஆட்டநாயகனாகவும் துக்ஷ்மந்த சமீர தொிவு செய்யப்பட்டாா்.
இதற்கமைய மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் கிாிக்கெட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.