சப்ரகமுவ ஆளுநராக நவீன் திசாநாயக்க நியமனம்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க சத்தியப் பிரமாணம் செய்துள்ளார்.
இன்று (13) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக, சபரகமுவ ஆளுநராக பதவி வகித்த டிக்கிரி கொப்பேகடுவ அண்மையில் தமது பதவியிலிருந்து விலகியிருந்தார்.
இந்த நிலையில், அவரது பதவி விலகலால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.