‘அரசிற்கு ஆதரவளிக்கும் தமது எம்.பி.க்கள் மீண்டும் கட்சிக்கு வரலாம்’ – மைத்திரி..!
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர்களாக பதவி வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை மீண்டும் தமது கட்சியுடன் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடவில்லை என கூறும் முன்னாள் ஜனாதிபதி, அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் தமது எம்.பி.க்களுடன் இணைந்து கட்சியை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான அனுமதியை தேர்தல்கள் ஆணைக்குழுவும் வழங்கியுள்ளதாகவும், எதிர்காலத்தில் அந்த எம்பிக்கள் தமது கட்சியுடன் இணைந்து செயற்பட வாய்ப்பு கிடைக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.