முஸ்லிம் திருமண சட்டத்தில் பிழையென்றால், பிழையாக பிறந்தவரா முஷர்ரப் எம்.பி? – ஐக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் காட்டம்!
முஸ்லிம் திருமண சட்டம் என்பது இஸ்லாமிய சட்டமோ ஷரீயா சட்டமோ அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் ShortNews நேர்காணலில் கூறியிருப்பது அவரது இஸ்லாமிய அறிவுக்குறையை காட்டுவதுடன் அவரது கருத்து கண்டிக்கத்தக்கதாகும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்ததாவது,
முஸ்லிம் விவாக விவாக ரத்து சட்டம் என்பது இஸ்லாமிய சட்டத்தில் இருந்தே எடுக்கப்பட்டது என்பதை தெரியாத ஒருவராக முஷர்ரப் இருப்பது கவலையானது.
ஒரு இஸ்லாமிய திருமணத்தில் அல்லது விவாகரத்தில் என்னென்ன நிபந்தனைகள் உள்ளதோ அவற்றை வைத்தே முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
முஷர்ரப் MP பேசும் போது முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் இது முஸ்லிம் திருமண சட்டம் திருத்தப்பட வேண்டும், திருத்த கூடாது முஸ்லிம்கள் இரு தரப்புக்குள் ஏற்பட்ட பிரச்சினை என்கிறார். இது தவறான வாதமாகும்.
முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம் சமூகம் முன் வைத்த ஒன்று என்றும் அதேவேளை ஜி.எஸ்.பி சலுகைக்காக 2001ல் வைக்கப்பட்ட கோரிக்கை எனவும் முஷர்ரப் சொல்லியிருப்பதன் மூலம் அவரே அவர் கருத்துக்கு முரண்படுகிறார்.
உண்மையில் முஸ்லிம் திருமண திருத்த சட்டத்தை முன் வைத்தது ஐரோப்பியரும் அவர்களின் இலங்கை ஏஜன்டுகளும்தான். இவர்கள் இதற்காக பயன்படுத்தியது இஸ்லாமிய ஒழுக்கவியலை மீறிய சில பெண்களையும் இலங்கையில் விபச்சாரம் அனுமதிக்கப்பட வேண்டும் என கூறிய முஸ்லிம் பெயர்தாங்கி பெண்களையும்தான்.
முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் தேவை என்பதாயின் இது கால வரை இச்சட்டத்தினால் முஸ்லிம்களில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை முஷர்ரப் சிந்திக்க வேண்டும்.
அச்சட்டத்தில் பிழை உள்ளது என்றால் அச்சட்டத்தின் அடிப்படையில்தான் முஷர்ரபின் பெற்றோர்களும் திருமணம் செய்தார்கள் என்பதால் பிழையான சட்டத்தில் மணமுடித்து பிழையாக பிறந்தவரா முஷர்ரப் என கேட்க வேண்டியுள்ளது.
ஆகவே முஸ்லிம் திருமண சட்டத்தில் எந்தவொரு திருத்தத்துக்கும் இடமளிக்க முடியாது என்பதே எமது கட்சியின் தீர்வாகும். அதில் புதிதாக எதையும் சேர்ப்பதாயின் உலமாக்களின் ஏகோபித்த முடிவின்படியே சேர்க்க வேண்டும் என்பதையே சொல்கிறோம்.
ஆகவே முஸ்லிம் சமூகம் ஆயிரம் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் நிலையில் சமூகம் பிரச்சினையாக பார்க்காத திருமண சட்டத்திருத்தத்துக்கு ஒத்துழைத்து முஸ்லிம் எம்.பி மார் இறைவனின் சாபத்துக்குள்ளாக வேண்டாம் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொள்கிறது.