வரவு செலவுத் திட்டம் சர்ப்பித்த பிற்பாடு அமைச்சரவையில் மாற்றம்

வரவு செலவுத் திட்டம் சர்ப்பித்த பிற்பாடு அமைச்சரவையில் மாற்றம்

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் மீளவும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 20ம் திகதி வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பிற்பாடு இந்த ஆண்டு இறுதியில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், தற்போது அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமைகளை களைவதே இதற்கான பிரதான நோக்கமாகும்.

அமைச்சுக்களுக்கான துறைகளை ஒதுக்கீடு செய்யும் போது கிரமமான முறையில் அவை ஒதுக்கீடு செய்யப்படாமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு அமைச்சரவையில் மாற்றம் செய்ய்பபட உள்ளது.

சில அமைச்சர்களுக்கும் ராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமைகளை தீர்க்கும் வகையில் துறைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

புதிய அரசாங்கத்தில் அமைச்சுக்களுக்கான துறைகள் ஒதுக்கீட்டில் நிலவும் முரண்பாட்டு நிலைமையினால் அதிகாரிகளும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் சில அமைச்சுக்களில் இன்னமும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான பல காரணிகளை கருத்திற் கொண்டு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.