பாண் – பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை..!

பாண் – பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை 10 ரூபாவால் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்குமாறு பேக்கரி உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தட்டுப்பாடுகள், விலை அதிகரிப்பை தவிர்ப்பதற்காகவே கோதுமை மாவை அத்தியாவசிய பொருளாக அறிவித்துள்ளோம். எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலை ஒருபோதும் அதிகரிக்கப்படாது என்ற உத்தரவின் காரணமாகவே பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்கலாம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் எதிர்வரும் நாட்களில் விலை குறைப்பு தொடர்பில் ஆராயப்படும் எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.