‘ பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருகிறேன்; சர்ச்சைக்குரிய மயக்க மருந்து குழந்தைகளுக்கு செலுத்தப்படவில்லை’ –  கெஹெலிய!

‘ பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருகிறேன்; சர்ச்சைக்குரிய மயக்க மருந்து குழந்தைகளுக்கு செலுத்தப்படவில்லை’ – கெஹெலிய!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

தாம் பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இலவச சுகாதார துறைக்கு வழங்கப்படும் நிதி தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதனை நிவர்த்திக்க முடியாவிட்டால் தொடர்ந்தும் பதவி வகிக்க தாம் தயார் இல்லை என்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரச்சினைக்குரிய மருந்தாக கருதப்படும் மயக்க மருந்து குழந்தைகளுக்கு இதுவரை உட்செலுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

குறித்த மயக்க மருந்தானது வயது வந்தவர்களுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்தார்.

பேராதனை போதனா மற்றும் பேராதனை பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய இந்திய தயாரிப்பு மயக்க மருந்தினால் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே குறித்த மயக்க மருந்து குழந்தைகளுக்கு இதுவரை உட்செலுத்தப்படவில்லை என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.