குருந்தி விகாரை பற்றி அம்பலப்படுத்தினால் பிரிவினைவாதிகளுக்கு பிரச்சினை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த காலத்தில் முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும் பரவியிருந்த சிங்கள நாகரீகம் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தும் தொன்மைப் பொருட்கள் பிரிவினைவாதிகளுக்கு முள்ளாக மாறிவிட்டன என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அப்பாவி தமிழ் மக்கள் இந்த ஆலயத்துடன் இணக்கமாக செயற்பட்டு அவர்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வழிவகுத்து தமிழ் அரசியல்வாதிகள் ஒதுங்கி இருந்தால் நாட்டின் பாரம்பரியத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
வரலாற்று சிறப்புமிக்க குருந்தி விகாரையை அவதானிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
“.. பிவித்துரு ஹெல உறுமய என்ற முறையில் பாரம்பரியமாக, சுமார் 2,100 வருடங்கள் பழமையான இந்த தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை மக்கள் மத்தியில் பிரித்துக் கொடுக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்துடன் இன்று குருந்தி விகாரைக்கு வந்தோம்.
இந்த இடத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதியுடன் நாம் இருக்கிறோம். மிக முக்கியமான ஒரு விஷயத்தை இங்கு பார்த்தோம். தமிழ் அரசியல்வாதிக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்ட முயலும் தமிழ் அரசியல்வாதிகளை தமிழ் மக்கள் நிராகரித்து வருவதை நாம் இன்று கண்டு வருகின்றோம். எமது பயணத்திற்கு எதிராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரவி ஹரன் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் 26 பேர் மாத்திரமே கலந்துகொண்டனர்.
எனவே, நாங்கள் வருவதற்குள் ரவி ஹரன் தனது போராட்டக்காரர்களுடன் சென்று விட்டார். மேலும், இந்த தொல்லியல் பகுதியில் உள்ள காப்புக்காட்டில் பயிர்ச்செய்கைப் பணிகளைச் செய்தவர்கள் எங்களை மிகவும் அன்புடன் வரவேற்று, தங்கள் பிரச்சினைகளையும் குறைகளையும் எங்களிடம் முன்வைத்தனர்.
உங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என நாம் தமிழ் மக்களிடம் கூறினோம். மேலும், உலக பாரம்பரியச் சின்னமாக மாறியுள்ள நமது தொன்மைச் சின்னங்கள் இந்த மண்ணில் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, உங்கள் நிலம் தொல்லியல் மதிப்புடையதாக இருந்தால், நீங்கள் சாகுபடிக்கு வேறு நிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.
அப்பாவித் தமிழ் மக்கள் விகாரையுடன் நட்புறவுடன் இருந்து அவர்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு இடம்வழங்கி தமிழ் அரசியல்வாதிகள் விலகி நின்றால் நாட்டின் பாரம்பரியத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க முடியும் என்பதை இன்று நடைமுறையில் நாம் அனுபவித்துள்ளோம்.
குருந்தி என்பது தொல்லியல் மதிப்பு கொண்ட விகாரை மட்டுமல்ல. இது அனுராதபுர காலத்தில் ஒரு பிராந்திய நகரமாக இருந்தது. ஒரு பெரிய குடியேற்றம். இந்த பகுதியில் தொல்பொருள் எச்சங்கள் சிதறிக்கிடக்கின்றன.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்த இடங்களில் இரும்பு உலைகள் தோண்டப்பட்டு இரும்பு உற்பத்தி செய்யப்பட்டது.
அவற்றை ஆராய்வதன் மூலம் உலக வரலாற்றில் தொழில்நுட்பத்தின் சித்தாந்தங்களை கூட மாற்ற முடியும். எனவே, மக்கள் நெற்பயிர்களை பயிரிடலாம். ஆனால் ஒரு உலக பாரம்பரியத்தை அதற்கு அர்ப்பணிப்பதற்காக அழிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
எனவே, பிரிவினைவாதிகள் மற்றும் பிரிவினைவாத அரசாங்கத்திடம் இருந்து இந்த இடத்தைக் காப்பாற்ற கல்கமுவ சாந்தபோதி தலைமை தேரரின் முயற்சிகளுக்கு முழு ஆதரவை வழங்குவதற்காக நாங்கள் இன்று இங்கு வந்துள்ளோம். அத்துடன் இலங்கையின் பழமையான தூபிகளில் ஒன்றான இது எமது பண்டைய நாகரிகத்தின் வரலாற்றை உலகிற்கு எடுத்துரைக்கும் இடமாகும்.
இந்த சிங்கள நாகரிகம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பரந்து விரிந்து கிடக்கும் பாரிய குடியேற்றம் என தெரியவந்தால் தாயகக் கதை அங்கேயே கட்டுக்கதையாகிவிடும்.
தமிழர் தாயகம் பொய்யானது என்பதற்கு உலகத்திடம் மௌனமாக உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இப்பகுதி முழுவதும் பரவியுள்ள தொல்பொருட்களே சான்று. பழங்கால பொருட்களை திட்டமிட்டு அழிக்க இந்த அரசியல்வாதிகள் கையாளும் தந்திரங்களை நாம் கண்களால் பார்த்திருக்கிறோம்.
இங்குள்ள விகாரை, இங்குள்ள விவசாய நிலம் போன்ற தொல்லியல் பெறுமதி மிக்க இடங்களைப் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான சிங்கள வரலாறு இந்த முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும் பரவியிருப்பது, இது நமது பாரம்பரியம் மட்டுமல்ல, உலக பாரம்பரியமும் கூட. அதை அழிக்க அனுமதிக்க மாட்டோம் என்பதை நாட்டுக்கு அறிவிக்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.