மஹிந்த தோல்வியடையும் போது இலங்கை வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடாக இருந்தது – நாமல்..!

மஹிந்த தோல்வியடையும் போது இலங்கை வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடாக இருந்தது – நாமல்..!

மகிந்த தோல்வியடையும் போது இலங்கை வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடாக இருந்தது, துரதிஷ்டவசமாக உலகில் கீழ் மட்டத்தில் பொருளாதார வளர்ச்சி வேகம் இருந்த நாட்டை கோட்டாபய ராஜபக்ச பொறுப்பேற்க நேரிட்டது.

வெளிநாடுகளில் இருந்து டொலர்களை பெற்று அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தியவர்கள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

போராட்டத்திற்கு இடையில் சில கட்சி அரசியல் இலாபத்தை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டன.இளைஞர்களை பொறிக்குள் தள்ளி தமது தேவைகளை நிறைவேற்றவே தற்போதும் அந்த கட்சிகள் முயற்சித்து வருகின்றன.

மகிந்த ராஜபக்சவின் அரசியல் பயணத்தில் 2005 ஆமு் ஆண்டு முதல் இரத்தினபுரி மாவட்ட மக்கள் மிகப் பெரிய ஒத்துழைப்புகளை வழங்கினர்.

2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச நாட்டை பொறுப்பேற்ற போது எமது பொருளாதாரம் 17 பில்லியன் டொலர்களாக இருந்தது.

17 ஆண்டுகள் செல்லும் போது எமது அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை 80 பில்லியன் டொலர்களாக அதிகரித்தது.

எமது அரசாங்கம் வேலையில்லா திண்டாட்டத்தை தனி இலக்கத்திற்கு கொண்டு வந்தது.

2015 ஆம் ஆண்டில் நாங்கள் தோல்வியடையும் போது, இலங்கை வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக இருந்தது. சீனாவுக்கு அடுத்த இடத்தில் இலங்கை இருந்தது.

இந்த நிலையில், துரதிஷ்டவசமாக உலகில் கீழ் மட்டத்தில் பொருளாதார வளர்ச்சி வேகம் இருந்த நாட்டை கோட்டாபய ராஜபக்ச பொறுப்பேற்க நேரிட்டது.

ஒற்றை இலக்கத்தில் இருந்த வங்கி கடன் வட்டி வீதம் இரண்டு இலக்கங்களாக அதிகரித்திருந்தது.

ராஜபக்சவினருக்கு சேறுபூம் முன்னாள் கமத்தொழில் அமைச்சரான அனுரகுமார திஸாநாயக்க, ராஜபக்ச அரசாங்கத்தை விட நல்லாட்சி அரசாங்கமே அதிகமான கடனை பெற்றதாக கூறுகிறார்.

அப்படியானால், நாட்டின் கடன் சுமையை அதிகரித்தது, ராஜபக்ச அரசாங்கமா அல்லது நல்லாட்சி அரசாங்கமா என்பது மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.