பௌத்த குருக்களிடமிருந்து 100 சதவீத, ஒழுக்கத்தை எதிர்பார்க்க வேண்டாம் – பகியங்கல ஆனந்த சாகர தேரர்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலைகளில், பௌத்த மதகுரு ஒருவரிடமிருந்து 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது சரியான மனோநிலையில்லை. ஆகவே இந்த நாட்டின் பௌத்தமதத்துறவிகளும் மக்களும் சரியான பாதையை பின்பற்றுமாறு நாங்கள் வலியுறுத்துகின்றோம் என பகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
பௌத்தமதத்துறவிகள் எனும் ரீதியில் நாங்கள் காணொளிகளில் உள்ள சம்பவங்களை ஏற்றுக்கொள்வதில்லை.
அதேவேளை தற்போதைய சமூக நிலைமையின் கீழ் பௌத்த மதத்துறவிகளிடமிருந்து 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்க்க இயலாது.
அண்மையில் நிகழ்ந்த சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. அவை நன்கு திட்டமிடப்பட்டவை. சிவில் சமூகத்தின் மத்தியில் பௌத்தமதத்துறவிகளின் கௌரவத்தையும் அதிகாரத்தையும் குறைப்பதற்காகவே இவை அரங்கேற்றப்படுகின்றன.
அரசசார்பற்ற அமைப்புகள் சில இதனை முன்னெடுப்பதுடன் அதற்கான பெருமளவு நிதி புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து பெறப்படுகிறது.
கடந்த சில தினங்களாக நாங்கள் தகவல்தொழில்நுட்ப துறையினருடன் இது குறித்து கலந்துரையாடினோம். அதனடிப்படையில் இந் நடவடிக்கைகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன என்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறான திட்டமிட்டு நடாத்தப்படும் சம்பவங்கள் குறித்து அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறித்து நாங்கள் வெட்கமடைகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.