ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி கண்டனம்..!

ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி கண்டனம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது மத சுதந்திரத்தை மீறும் செயல் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தெற்கின் பூகோள விழுமியங்களை  மதிக்குமாறும், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் மேற்கத்திய நாடுகளிடம்  ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது