ஆயிரக்கணக்கான கார்களை திரும்பப் பெறவுள்ள Toyota
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக வாகன சந்தையில் வலுவான நிறுவனமான Toyota உற்பத்தி குறைபாடு காரணமாக ஆயிரக்கணக்கான Toyota கார்களை திரும்பப் பெற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
2020 மற்றும் 2023 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட பல Toyota Yaris பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் வகை கார்கள் திரும்ப பெறப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தந்த கார் வகைகளின் சமநிலை தொடர்பான உற்பத்தி குறைபாடு காரணமாக வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
அந்த வகையைச் சேர்ந்த சுமார் 7633 கார்கள் பாதிக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன