17 வயது சிறுமியை காணவில்லை – கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை..!
கொழும்பு – தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமியொருவர் இன்று வெள்ளிக்கிழமை, வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த சிறுமி இன்று 14-07-2023 வீட்டிலிருந்து வெளியேறி தெமட்டகொட பகுதியிலிருந்து மாளிகாவத்தை செல்லும் வழியில் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாறு காணாமல்போயுள்ள சிறுமியை கண்டுபிடிக்க உதவுமாறு தந்தை தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும், காணாமல்போன சிறுமி தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் (077-3715446 -0761611667) என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.