ராடா நிறுவனம் குறித்த விசாரணைக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஹேரத் ஆஜர்

ராடா நிறுவனம் குறித்த விசாரணைக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஹேரத் ஆஜர்

ராடா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் 169 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பான தகவல்களை திரட்டிய கணக்காய்வு திணைக்கள அதிகாரியான எச்.எம்.கே.ஹேரத் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று ஆஜரானார்

இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட ஆவணமொன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில் வாக்குமூலத்தை பெற்றுக் கொள்வதற்காக தாம் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும், இக்குறித்த நிறுவனமானது சுனாமி பேரழிவினால் வீடுகளை இழந்த வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்காக ராடா நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தின் நிதி, முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி அமைப்பின் புலனாய்வு பிரிவினர் தலைவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.