ஹாபீஸ் நசீரின் இடத்திற்கு அலி சாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்..!
சற்று முன்னர் அலி சாஹிர் மௌலானா சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
முன்னாள் பாராளுமன்றம் உறுப்பினர் நஸீர் அஹமட்டினால் வெற்றிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த அலி சாஹிர் மௌலானா தெரிவு செய்யப்பட்டார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டது.