பலஸ்தீனத்திற்கு ஆதரவாக லண்டனில் மாபெரும் போராட்டம்..!

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக லண்டனில் மாபெரும் போராட்டம்..!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக லண்டனில் மாபெரும் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

காஸா பகுதி மீதான தாக்குதல்களை நிறுத்தக் கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மாபெரும் போராட்டம் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களை எதிர்கொள்ளும் வகையில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பலஸ்தீன கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

காசா பகுதியை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கு அமெரிக்க ஜனாதிபதி பைடனும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் பாதுகாப்புப் படையினரையும் நிறுத்தியுள்ளனர்.

யூத சமுதாயத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என போராட்டக்காரர்களிடம் வலியுறுத்தி உள்ளனர்.